வடக்கு மாகாண முன்னாள் அவைத்தலைவரினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் தொடர்பில் மாகாண ஆளுநர் அறிந்திருக்கவில்லை.
எனினும் குறித்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்கப்பட்ட போதே அவருக்கு குறித்த கடிதம் ஆளுநர் செயலக அதிகாரிகளினால் அவருக்கு காண்பிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கைதடியில் உள்ள முதலைமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், மாகாண சபை ஆட்சியில் இருந்த போது நடைபெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பாக முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணை குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி ஆளுநருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
குறிப்பாக வடக்கு மாகாண கல்வி அமைச்சில் இரண்டு நாட்களில் 8 கோடி ரூபாய் பணம் செலவழிக்கப்பட்டமை விசாரணைக் குழுவால் கண்டறியப்பட்டதை முன்னாள் அவைத்தலைவர்; தமது கடிதத்தில் தெரிவித்திருந்தமையையும்; ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டினர்.
மாகாண முன்னாள் அவைத்தலைவர், ஆளுநருக்கும், பிரதம செயலருக்கும் இதன் பிரதிகளை கடந்த 9 ஆம் திகதி அனுப்பியுள்ளார்.
அவ்வாறு அனுப்பிய கடிதம் தொடர்பில் ஆளுநரிடம் வினவிய போது,மாகாண சபை அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்படடமை,அது தொடர்பில் விசாரணைக் குழு நியமிக்கப்படடமை மற்றும் அண்மையில் அவைத்தலைவர் அனுப்பியிருந்த கடிதம் இவை எதுவுமே தெரியாது என ஆளுநர் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அப்போது அங்கிருந்த ஊடகவியலாளர் ஒருவர், அவைத்தலைவர் அனுப்பிய கடிதத்தின் பிரதியை ஆளுநரிடம் காண்பித்தார்.
அதனை பார்வையிடட ஆளுநர் உடனடியாக தனது செயலாளரை அழைத்து தமக்கு இவ்வாறு ஓர் கடிதம் வந்ததா?என கேடடார்.
அப்போது அந்த கடிதம் தொடர்பில் ஆராய்ந்த செயலாளர், குறித்த கடிதம் கிடைக்கப்பெற்றதை உறுதிப்படுத்தினார்.
அதன் பின்னர் ஆளுநர் இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்படும்.
எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்தப்படும் என உறுதியளித்தார்.
கருத்து தெரிவிக்க