உள்நாட்டு செய்திகள்

‘ பச்சை அரசை பாதுகாக்க சிவப்பு யானைகள் களத்தில்’

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையால் சிவப்பு யானைகள் (ஜே.வி.பி.) குழப்பமடைந்துள்ளன என்று கூட்டு எதிரணி குற்றஞ்சாட்டியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தைப் பாதுகாக்கும் நோக்கிலேயே மக்கள் விடுதலை முன்னணியால் நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

‘’ அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதற்கு ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்கூட தயாராக இருக்கின்றனர்.

இந்நிலையில் அதை குழப்பியடித்து, ரிஷாட்டுக்கு எதிரான எதிர்ப்பலைகளை திசைதிருப்பும் நோக்கிலேயே மக்கள் விடுதலை முன்னணி செயற்பட்டுவருகின்றது. ‘’ என்றும் கூறினார்.

 

 

 

கருத்து தெரிவிக்க