தேசிய தெளஹீத் ஜமாத் பயங்கரவாத அமைப்பின்கீழ் தற்கொலை குண்டு தாக்குதலுக்கு பயிற்சிபெற்ற 20 பேரிடம் இரகசிய காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
காவல்துறை தலைமையக வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள பத்திரிகையொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
21/4 தாக்குதலையடுத்து பாதுகாப்பு தரப்பினரால் பலகோணங்களில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அடிப்படைவாத சிந்தனைகள் தொடர்பான கருத்தரங்கு என்ற போர்வையிலேயே இவர்களுக்கு தற்கொலை குண்டுதாக்குதலுக்கான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 20 பேரும் தற்கொலை குண்டுதாரியான சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பை பேணிவந்துள்ளனர் என்பதும் விசாரணைகள்மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தற்கொலை குண்டுதாக்குதல் தொடர்பில் இதுவரையில் 89பேர் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க