உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்

ரிஷாட்டின் கடிதத்தை ஏற்க மறுத்த பிரதமர்

தம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து நடத்தப்படும், விசாரணைகளில் தாம் குற்றமிழைத்தது கண்டறியப்பட்டால், எல்லா பதவிகளில் இருந்தும் விலகத் தயார் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று ஆளும்கட்சி நாடாளுமன்றக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதன்போதே ரிஷாட் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அத்துடன்,  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் பதவி விலகல் கடிதத்தை கையளிக்க ரிஷாட் முயன்றதாகவும், எனினும், பிரதமர் அதனை ஏற்கவில்லை என்றும் தெரியவருகின்றது.

” நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளதால் விசாரணைகள் முடிவடையும்வரை தன்னால் முடிவொன்றுக்கு வரமுடியாது.” என்று பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, ” ஜனாதிபதி மற்றும் பிரதமர் கோரிக்கை விடுத்தால் அமைச்சுப் பதவியை துறக்க நான் தயார்.” என்று நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் ரிஷாட் அறிவிப்பு விடுத்துள்ளார்.

கருத்து தெரிவிக்க