புதியவைவணிக செய்திகள்

வெங்காய இறக்குமதி செய்வது குறித்து ரவீந்ர பெர்ணான்டோ கருத்து

சந்தையில் தற்போது வெங்காயத்திற்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ள காரணத்தால் இம்மாதம் 31ம் திகதிக்குள் 30,000 மெற்றிக் தொன் வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அண்மையில் தீர்மானித்திருந்தது.

அதற்கிணங்க வெங்காய இறக்குமதி செய்வது குறித்து இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவீந்ர பெர்ணான்டோ கருத்து தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில் வெங்காயத்தை இறக்குமதி செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்தின் படி 20,000 மெற்றிக் தொன் வெங்காயத்தை முதற்கட்டமாக இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவீந்ர பெர்ணான்டோ தெரிவித்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க