இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் இந்திய முன்னணி வர்த்தக பிரதிநிதிகளுக்குமிடையிலான கலந்துரையாடல்

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நேற்று (டிசம்பர் 16) புதுடில்லியில் இந்திய கைத்தொழில் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்திய முன்னணி வர்த்தகப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

அதற்கிணங்க குறித்த கலந்துரையாடலில் இரு நாடுகளுக்குமிடையிலான முதலீடு மற்றும் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தல் குறித்தும் டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா,புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க