கொழும்பிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமைப்பத்திரங்களை வழங்குவதற்கான 515 மில்லியன் ரூபாவை வழங்கிட திறைசேரி ஒப்புக்கொண்டுள்ளது.
2024ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட அனுமதி வரம்புக்கு அமைவாக கொழும்பிலுள்ள அடுக்குமாடி உரிமையாளர்களுக்கு உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கான முத்திரை மற்றும் நொந்தாரிசுக்கான கட்டணமாக 515 மில்லியன் ரூபாவை வழங்க திறைசேரி ஒப்புக்கொண்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ்.சத்யானந்தா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் கொழும்பு மாவட்டத்திலுள்ள 50,000 அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கான உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வானது இம்மாதம் ஜூலை 17 ம் திகதி சுகாதார உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான மிஹிந்து செத்புர, சிரிசர உயன மற்றும் மெட்ரோ வீட்டுத் தொகுதிகளின் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கும், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீட்டுத் தொகுதிகளில் வசிப்பவர்களுக்கும் சுமார் 1,500 உரிமைப் பத்திரங்களும் வழங்கப்படவுள்ளன.
கருத்து தெரிவிக்க