உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்வணிக செய்திகள்

எரிவாயு விலை குறைப்பு

லிட்ரோ எரிவாயு நிறுவனம், இன்று (02) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த நிலையில் லிட்ரொ எரிவாயுவின் விலையை குறைத்துள்ளது.

அந்தவகையில், 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 100 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 3,690 ரூபாவாகவும், 5 கிலோ கிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 1,482 ரூபாவாகவும், 2.3 கிலோ கிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 18 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 694ரூபாவாகவும் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க