உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவணிக செய்திகள்

இன்று எரிவாயு விலை திருத்தம்!

இன்று (02) உலக சந்தையில் உள்ள எரிவாயு விலைக்கு ஏற்ப இலங்கையில் எரிவாயு விலை திருத்தம் செய்யப்பட உள்ளதாக லிட்ரொ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இறுதியாக மாதாந்த எரிவாயு விலை திருத்தத்தின் படி, ஜூன் 4ஆம் திகதி,
12.5 கிலோகிராம் எடையுள்ள வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 150 ரூபாவால் குறைக்கப்பட்டு 3,790 ரூபாவாகவும், 5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 60 ரூபாவாலும், 2.3 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 28 ரூபாவாலும் குறைக்கப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க