புதியவைவெளிநாட்டு செய்திகள்

பிரித்தானியாவில் மீண்டும் புதிய வகையான கொரோனா வைரஸ்!

பிரித்தானியாவில் ஏப்ரல் மாதம், FLiRT என அழைக்கப்படும் கொரோனா வைரஸ்களின் மாறுபாடுகளில் ஒன்றான KP. 3 என்னும் கொரோனாவைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

அந்தவகையில், மீண்டும் புதிய வகையான கொரோனா வைரஸ் வேகமாக பரவ ஆரம்பமாகியுள்ளதுடன் இந்த புதிய கொரோனா வைரஸ் பெண்களை விட ஆண்களை அதிகம் பாதிக்கக்கூடியதாகவும் இந்த வைரஸின் அறிகுறிகளாக குளிர் காய்ச்சல், தொடர் இருமல், சுவை, வாசனை அறிவதில் மாற்றம் அல்லது இழப்பு, மூச்சுத்திணறல், சோர்வாக உணர்தல், உடல் வலி, தலைவலி, தொண்டை அழற்சி, மூக்கடைப்பு அல்லது மூக்கில் நீர் வடிதல், பசியின்மை, வயிற்றுப்போக்கு, ஆகியவை காணப்படும் என பிரித்தானிய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க