சினிமாபுதியவை

பிரதீப் ஆண்டனிக்கு விரைவில் திருமணம்!

அருவி, வாழ், டாடா போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்ற நடிகர் பிரதீப் ஆண்டனி. தனியார் டிவியில் ஒளிபரப்பான கமல் தொகுத்து வழங்கிய ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றதில் பிரதீப் ஆண்டனிக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகியது

இந்நிலையில் தனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக மணப்பெண் உடன் இருக்கும் போட்டோவை வலைதளத்தில் பிரதீப் ஆண்டனி பகிர்ந்துள்ளார். அவரது பெயர் உள்ளிட்ட மற்ற விபரத்தை வெளியிடவில்லை என்பதுடன் இது காதல் திருமணம் என கூறப்படுகிறது. விரைவில் மணப்பெண் பெயரையும், திருமண தேதியையும் பிரதீப் வெளியிடுவார் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க