புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

நேபாளத்தை வீழ்த்தி பங்களாதேஷ் முன்னேற்றம்

இன்று (ஜூன் 17) நடைபெற்ற டி 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேபாளம் மற்றும் பங்களாதேஷ் அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன.

அதற்கிணங்க நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நேபாள அணி பந்து வீச்சை தெரிவு செய்ததையொட்டி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 19.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ரன்களை எடுத்திருந்தது.

இதையடுத்து 107 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய நேபாள அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 85 ரன்களை மட்டும் எடுத்திருந்ததையொட்டி 21 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தி பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றது.இவ்வெற்றியின் மூலம் பங்களாதேஷ் சூப்பர் 08 சுற்றுக்கு முன்னேற்றமடைந்துள்ளது.

கருத்து தெரிவிக்க