சினிமாபுதியவை

ராகவா லோரன்ஸின் ‘காஞ்சனா 4’ திரைப்படம்!

ராகவா லோரன்ஸ் இயக்கத்தில் வெளியான ‘காஞ்சனா’ – ‘காஞ்சனா 2’ – ‘காஞ்சனா 3’ ஆகிய படங்கள் வெளியாகி வசூல் ரீதியாக பாரிய வெற்றியை பெற்றது.

இதனால் திரையுலக வணிகர்களின் விருப்பத்தை உணர்ந்த ராகவா லோரன்ஸ் ‘காஞ்சனா 4 ‘ படத்தின் பணிகளை தொடங்கி இருக்கிறார்.‌ இப்படத்தின் திரைக்கதை எழுதும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும், எதிர்வரும் செப்டம்பர் மாதம் ‘காஞ்சனா 4’ திரைப்படத்துக்கான படப்பிடிப்பு தொடங்கும் என்றும், அதனை ராகவா லோரன்ஸ் தயாரிப்பதுடன், கதையின் நாயகனாக நடித்து இயக்கவிருக்கிறார் என்றும் பட குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

கருத்து தெரிவிக்க