உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

விபத்துக்குள்ளான ஈரான் ஜனாதிபதி பயணித்த உலங்கு வானூர்தி

ஈரானின் கிழக்கு அஸர்பைஜான் மாகாணத்துக்கருகே நேற்று (மே 19) ஈரான் ஜனாதிபதி இப்ராஜிம் ரைசி பயணித்த உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டின் அரச ஊடகம் செய்தி தெரிவித்துள்ளது.

கடும் பனி காரணமாக வானூர்தி தரையிறங்கியிருக்கலாம் அல்லது விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்றும் மீட்புக்குழுவினர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்திருப்பதாகவும் மோசமான வானிலை நிலவுவதால் குறித்த இடத்தை அடைவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் ஈரான் உள்துறை அமைச்சர் அஹ்மத் வாஹிதி தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க