இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றச்சாட்டில் கடந்த மாதம் 22ம் திகதி கொழும்பு வணிக வர்த்தக வளாகத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட மொஹமட் ருஷ்டி நேற்று (ஏப்ரல் 07) அத்தனகல்ல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.
அதற்கிணங்க பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த மொஹமட் ருஷ்டி மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்ற உத்தரவிற்கமைய விடுதலை செய்யப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க