எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கம் அமைக்கப்படும் வரையிலாவது அரசாங்கத்திற்கு சொந்தமான சொத்துக்கள் அல்லது வர்த்தகங்களை விற்பனை செய்வதற்கு மேற்கொள்ளப்படும் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் இடைநிறுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதனை விசேட அறிவிப்பொன்றை விடுத்து அவர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும் கட்சி அரசாங்கத்திற்குச் சொந்தமான சொத்துக்கள் மற்றும் வர்த்தகங்களை தமக்குக் கிடைக்கும் ஆணையின்படி கையாள முடியும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு அரசாங்கத்திற்கு சொந்தமான சில சொத்துக்கள் மற்றும் வர்த்தகங்களை விற்பனை செய்யும் நடவடிக்கைகளால், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்து தெரிவிக்க