புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் இடியுடன் கூடிய பலத்த மழையால் சர்வதேச விமானங்கள் ரத்து!

நேற்று (01.05) ஐக்கிய அரபு அமீரகத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்த காரணத்தால் பல சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அத்துடன் நாட்டின் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம், நிலைமையைச் சமாளிக்க தயார் நிலையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

துபாயில் பெய்த மழையை விட இது குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இருப்பினும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது

கருத்து தெரிவிக்க