இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு இரண்டாயிரம் ரூபா சம்பளம்:கல்வி இராஜாங்க அமைச்சர்

தற்போதைய சூழ்நிலைக்கமைய பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரத்து 700 ரூபா அல்லது இரண்டாயிரம் ரூபா வழங்கினால் கூட அது போதாது எனவே குறைந்த பட்சம் நாளொன்றுக்கு இரண்டாயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும்.

200 ரூபா சம்பள அதிகரிப்புக்கே கம்பனிகள் தயாராக உள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு இணக்கம் தெரிவிக்க முடியாது. குறைந்தபட்சம் ஆயிரத்து 700 ரூபாவாவது அவசியம் கிடைக்க வேண்டும். இரண்டாயிரம் ரூபாவுக்கு மேல் செல்ல வேண்டும் .

பெருந்தோட்டங்களை பொறுப்பேற்றது முதலே நஷ்டம் என்ற புராணத்தை கம்பனிகள் பாடி வருகின்றனர். இலாபம் இல்லையேல் தோட்டங்களை அரசிடம் கையளிக்கலாம். ஆனால் அவர்கள் அவ்வாறு கையளிப்பதில்லை. காரணம் கம்பனிகள் நஷ்டத்தில் இயங்கவில்லை என கல்வி இராஜங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்

கருத்து தெரிவிக்க