இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கொழும்பு தொடர் மாடி குடியிருப்பிலிருந்து தோட்டாக்கள் மீட்பு

கொழும்பு 8, பொரளை பகுதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றின் கழிவறைக்கு அருகில் இருந்த குழியிலிருந்து 15 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு கைப்பற்றபட்ட தோட்டாக்களானது எம் 16 ரக துப்பாக்கிகளின் தோட்டாக்கள் என தெரிவிக்கப்படுகிறது.

கண்டுபிடிக்கப்பட்ட தோட்டாக்களை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க