இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

நடுத்தர, சிறிய மற்றும் மிகச்சிறிய கைத்தொழிற்சாலைகளுக்கு பூட்டு

பொருளாதார நெருக்கடி, கொவிட் தொற்றுநோய் மற்றும் அரசாங்கக் கொள்கைகளின் பலவீனம் காரணமாக, கடந்த ஆண்டில் நாடு முழுவதும் சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தரவுகளின்படி, கடந்த ஆண்டில் (2022) சுமார் 77,118 நடுத்தர, சிறிய மற்றும் மிகச்சிறிய கைத்தொழில்கள் மூடப்பட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார் .

2020 இல் மூடப்பட்ட எண்ணிக்கை 87,909 ஆகும். குறித்த இரண்டு வருடங்களில் சுமார் 1,49,234 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் கிராமப்புற மக்களின் வருமானம் மற்றும் வாழ்க்கை நிலைமைகளை கடுமையாக பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறான கைத்தொழில்களை மூடுவது நாட்டு மக்களை பெரிதும் பாதித்துள்ள பாதகமான நிலைமை என பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்து தெரிவிக்க