வெளிநாட்டு செய்திகள்

அமெரிக்காவும்  இங்கிலாந்தும் ஹூதிகள் மீது தாக்குதல்

அமெரிக்காவும்  இங்கிலாந்தும் ஆஸ்திரேலியா, பஹ்ரைன், கனடா மற்றும் நெதர்லாந்தின் போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களின் ஆதரவுடன் இன்று வெள்ளிக்கிழமை (12ஆம் திகதி) தொடக்கத்தில் யேமனில் ஹூதிகளுக்கு எதிராக பல இடங்களில் தாக்குதல்களை நடத்தின.

ஈரான் ஆதரவு குழுவிற்கு எதிராக செங்கடலில் சர்வதேச கப்பல் போக்குவரத்தை குறிவைத்துத் தாக்கியது  மட்டுமல்லாமல் அமெரிக்கா மற்றும் பிரித்தானியக் கடற்படையினர் மீது  ஹூதி அமைப்பினர் டிரோன் தாக்குதல்களை நடத்தியிருந்தனர். இருப்பினும் அனைத்து டிரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்கா பிரித்தானிய கடற்படையினர் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று அமெரிக்காவும் மற்றும் இங்கிலாந்தும் பல இடங்களில் தாக்குதல்களை நடத்தின. கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஹூதிகள் எச்சரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Also Read:  பாகிஸ்தானில் நிமோனியாவால் குழந்தைகள் உயிரிழப்பு

கருத்து தெரிவிக்க