இயற்கை நமக்கு கொடுத்த காய்கறிகளை தினசரி உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். காய்கறிகள் உடல் ஆரோக்கியத்திற்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் அனைத்தையும் உள்ளடக்கியுள்ளன. அதில் முக்கியமானது கரட். பொதுவாக கரட் சாப்பிடுவது கண்களுக்கு நல்லது என்று பலர் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏனெனில் கரட்டில் கண்களின் ஆரோக்கியத்திற்கு வேண்டிய வைட்டமின் ஏ ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இது தவிர கரட்டில் இன்னும் பல்வேறு சத்துக்கள் உள்ளன.
இப்படிப்பட்ட கரட்டை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஜூஸாகவும் உட்கொள்ளலாம். ஆனால் கரட் ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள சத்துக்களை முழுமையாக உடல் உறிஞ்சி, உடலுறுப்புக்களின் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருக்கும்.
அத்துடன் தினமும் ஒரு டம்ளர் கரட் ஜூஸை குடித்து வந்தால், அது முதுமைக் கோடுகள், சரும சுருக்கங்கள் மற்றும் பிற முதுமைக்கான அடையாளங்களைத் தடுக்க உதவி புரிவதோடு, சருமத்திற்கு நல்ல பொலிவைத் தரும். ஏனெனில் இதில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகளவில் உள்ளன. ஆகவே தினமும் இந்த ஜூஸை குடிக்கும் போது, சருமம் புத்துணர்ச்சியுடனும், பொலிவாகவும், இளமையாகவும் காட்சியளிப்பதைக் காணலாம்.
Also Read: வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள்!
கருத்து தெரிவிக்க