இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

சட்டமா அதிபரால், யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்சி பொரெஸ்ட் ஆகிய இருவருக்கும் எதிராக நிதி மோசடி வழக்கு தாக்கல் செய்யப்பட்ட குறித்த குற்றப்பத்திரிகை இன்று (ஏப்ரல் 04) கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் ஆதித்ய பட்டபெதிகை முன்னிலையில் கையளிக்கப்பட்டிருந்தது.

அதற்கிணங்க யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்சி பொரெஸ்ட் ஆகிய இருவரும் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு இவர்களுக்கெதிரான குறித்த வழக்கு எதிர்வரும் மே மாதம் 30ம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க