நாட்டில் கல்வியை ஸ்திரப்படுத்தி தீவிரவாதத்தை அகற்றி நாட்;டுக்கு தேவையான திட்டங்களை அமுல்செய்யப்போவதாக ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாஸ மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
சுகததாஸ உள்ளரங்கில் இன்று இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர்களின் விவாத நிகழ்ச்சியின்போதே அவர்கள் இந்த உறுதியை வழங்கினார்கள்.
மார்ச் 12 இயக்கம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
சட்டம் ஒழுங்கு தொடர்பான முதலாவது கேள்விக்கு பதிலளித்த சஜித் பிரேமதாஸ, நாட்டின் சட்ட அமைப்புக்களை அரசியலற்ற வகையில் செயற்படுத்தப்படுத்தவுள்ளதாக குறிப்பிட்டார்.
பாதுகாப்பு படையினர் சுயாதீனமாக செயற்பட வழிவகுக்கப்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தக் கேள்விக்கு பதிலளித்த அநுரகுமார திஸாநாயக்க சட்டம் ஒழுங்கு தனிப்பட்டவர்களின் நலனுக்கு அனுகூலமாக நடைமுறைப்படுத்தப்படக்கூடாது என்று தெரிவித்தார்.
இன்று நாட்டில் சட்டம் ஏழை பணக்காரர் என்ற வகையில் வித்தியாசப்படுத்தி பார்க்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் தீவிரவாதத்துக்கு இடம்தரப்படமாட்டாது என்று சஜித் பிரேமதாஸ கூறினார்.
அனைத்து பள்ளி மாணவர்களுக்கு அனைத்து சமயப்பாடங்களும் தமது ஆட்சியின் கீழ் கற்பிக்கப்படும் என்று அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க