உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

‘மொட்டு’ சின்னத்தை விட்டுக்கொடுக்க தயாரில்லை!

” ஜனாதிபதி தேர்தலில் ‘தாமரை மொட்டு’ சின்னத்திலேயே கோட்டாபய ராஜபக்ச களமிறங்குவார். இதுவே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடாகும்.” – என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ராஜபக்சக்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்குமிடையிலான சந்திப்பு இன்று 28 மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச, தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச ஆகியோரும் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.

இதன்போது கூட்டணி குறித்தும், ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளன.

ஜனாதிபதி தேர்தலில் கூட்டணியாக மொட்டு சின்னத்தில் போட்டியிட்டுவிட்டு. பொதுத்தேர்தலின்போது ‘பொது ‘ சின்னத்தில் களமிறங்கலாம் என இச்சந்திப்பின்போது ஜனாதிபதிக்கு கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கட்சி உறுப்பினர்களிடம் கலந்துரையாடிய பின்னர் நிலைப்பாட்டை அறிவிப்பதாக ஜனாதிபதி மைத்திரி, ராஜபக்சக்களிடம் கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க