7 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, தனது பயணத்தை முடித்து டெல்லி திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அமெரிக்காவுக்கு 7 நாட்கள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி கடந்த 21-ம் தேதி சென்றார். முதலில் ஹூஸ்டன் நகரில் அமெரிக்க இந்தியர்கள் சார்பில் நடத்தப்பட்ட “ஹவுடி மோடி” நிகழ்ச்சியில் ஒரே மேடையில் அதிபர் ட்ரம்புடன் பங்கேற்று பிரதமர் மோடி பேசினார்.
அதன்பின் நியூயார்க் சென்ற பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்,
பல்வேறு நாடுகளின் தலைவர்கள், முதலீட்டாளர்கள் சந்தித்துப் பேசினார்.
இறுதியாக நேற்று ஐநா பொதுக்குழுக் கூட்டத்தில் உரையாற்றி தனது பயணத்தை பிரதமர் மோடி நிறைவு செய்தார். இதையடுத்து அவர் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டார்.
கருத்து தெரிவிக்க