ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும் என தேசிய தேர்தல் ஆணைக்குழு இன்று (18) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தில் இன்று நள்ளிரவு வெளியாகும் என்பதுடன் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு ஒக்டோபர் 7 ஆம்
முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.
வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். அத்துடன், வேட்பாளர்கள் தமது பரப்புரை பணிகளை முன்னெடுப்பதற்கு ஐந்து வாரங்கள் ஒதுக்கப்படும்.
இலங்கையில் நடைபெறவுள்ள 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச களமிறங்கியுள்ளார்.
ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்க போட்டியிடுகின்றார். எனினும், ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் இன்னும் பெயரிடப்படவில்லை.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாகவே இழுத்தடிப்பு நடைபெற்றுவருகின்றது.
பல கட்சிகள் போட்டி
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பம் கொண்டுள்ளதாக, 20 இற்கும் அதிகமான அரசியல் கட்சிகள், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குத் தெரியப்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க