சினிமா

பத்து வருடங்களின் பின்னர் விஜய் மற்றும் நயன்தாராவின் ரொமான்டிக் பாடல்

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் தளபதி விஜய் நடித்திருக்கும் படம் பிகில். அட்லி இயக்கும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். தீபாவளியை முன்னிட்டு வெளியாகவிருக்கும் இப்படத்தின் ஓடியோ விழாவில் நயன்தாரா பங்கேற்பாரா என்ற கேள்விகள் எழுந்து கொண்டிருந்த. ஆனால் தற்போது பிகில் ஆடியோ விழாவில் நயன்தாரா கலந்து கொள்ள முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அது ஒருபுறமிருக்க, இந்த படத்தில் இருந்து ஏற்கனவே சிங்கப்பெண்ணே, வெறித்தனம் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறவிருக்கும் நிலையில் இந்த படத்தில் இருந்து “உனக்காக” என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலை ஸ்ரீகாந்த் ஹரிஹரன் மற்றும் மதுர தாரா தல்லூரி பாட, பாடலாசிரியர் விவேக் இப்பாடலை எழுதியுள்ளார்.

பிகிலிலிருந்து தளபதி விஜய் – நயன்தாராவின் “உனக்காக” பாடல் இதோ வீடியோ!

https://www.youtube.com/

கருத்து தெரிவிக்க