உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

கொழும்பில் களமிறங்கினார் சீன பிரதிநிதி – சம்பந்தனையும் சந்திப்பார்!

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட அதிகாரியான சென் மின் இரண்டு நாட்கள் பயணமாக இன்று கொழும்பை வந்தடைந்தார்.

சீன சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட அதிகாரியான சென் மின், இலங்கை அரசாங்கத்தின் மூத்த மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் நெருங்கிய சகாவான சென் மின், சீனாவில் வளர்ந்து வரும் ஒரு நட்சத்திரமாக பார்க்கப்படுகிறார்.

இவர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சோங்கிங் செயலராக 2017இல் நியமிக்கப்பட்டார்.

பின்னர் 19 ஆவது கட்சி மாநாட்டில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவுகளை எடுக்கும் உயர் சபையான, 25 பேர் கொண்ட பொலிட்பீரோவின் உறுப்பினர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டார்.
இவர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறப்பினராகவும் இருந்து வருகிறார்.

கருத்து தெரிவிக்க