சினிமா

கையில் கத்தியுடன் வெறித்தனம் காட்டும் தளபதி விஜய்யின் பிகில் போஸ்டர்

அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இணைந்து நடித்துள்ள ‘பிகில்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. மேலும் கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மகளிர் கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இம்மாதம் 19ம் திகதி சாய் ராம் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த இசை வெளியீட்டு விழா வரும் ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க