சினிமா

சைரா நரசிம்ம ரெட்டி” படத்தின் தமிழ்நாட்டு உரிமையை சூப்பர் குட்ஸ் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது

சிரஞ்சீவி, நயன்தாரா, விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், தமன்னா ஆகியோர் நடிக்கும்  “சைரா நரசிம்ம ரெட்டி”படத்தின்  தமிழ்நாட்டு உரிமையை பிரபல முன்னணி நிறுவனமான சூப்பர் குட்ஸ் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது.

தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா, தனது தந்தை சிரஞ்சீவி நடிப்பில், மிகுந்த பொருட்செலவில் ‘சைரா நரசிம்மஹ ரெட்டி’என்ற படத்தை தயாரித்து வருகிறார். சுரேந்தர் ரெட்டி இயக்கி வரும் இந்த படம் தெலுங்கு, தமிழில் நேரடியாகவும், இந்தியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வரவுள்ளது.

முக்கிய முன்னனி நடிகர்கள் நடித்துள்ளனர் என்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. பிரிட்டிஷ் அரசை எதிர்த்து மக்கள் செய்த முதல் புரட்சியை பற்றிய கதை. இதுவரை வரலாற்றில் போற்றப்படாத ஒரு உண்மையான ஹீரோவை பற்றிய  கதை தான் “ரைசா நரசிம்ம ரெட்டி”

இப்படத்திற்கு பாலிவுட் இசையமைப்பாளர் அமித் திரிவேதி இசையமைத்துள்ளார். இந்தி திரையுலகில் பல வெற்றி படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க