நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றதிலிருந்தும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உள் சுற்றுவட்டத்திலிருந்தும் இரு பேரணிகள் சம நேரத்தில் ஆரம்பமாகி, யாழ்ப்பாணம் முற்றவெளி நோக்கி நகரத் தொடங்கியுள்ளன.
நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலிலிருந்து ஆரம்பமான பேரணியில் சமயத் தலைவர்கள், தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களான முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்,தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்கள் உட்பட பெருமளவிலான பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து பேரணி ஆரம்பிப்பதற்கு முன்னர் பேரணியில் கலந்து கொள்ள வந்தவர்களைப் பல்கலைக்கழக பாதுகாப்புப் பிரிவினர் உள்ளே செல்வதற்கு அனுமதி மறுத்த போதிலும், யாழ். பல்கலைக்கழகத்தின் தகுதி வாய்ந்த அதிகாரி விடுத்த விசேட உத்தரவுக்குப்பின்னர் அனைவரும் உள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்கள், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் உட்பட நூற்றுக் கணக்கானோர் அங்கிருந்து யாழ்ப்பாணம் முற்றவெளி நோக்கிப் புறப்பட்டிருக்கின்றனர்.
* சிங்கள பௌத்த மயமாக்கலை உடனடியாக நிறுத்து,
* சர்வதேச போர்க்குற்ற விசாரணையை நடாத்து,
* தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்,
* வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உடனடி விசாரணை நடாத்து,
* வடக்கு – கிழக்கில் இராணுவ மயமாக்கலை உடனடியாக நிறுத்து,
* இடம்பெயர்ந்த அனைவரையும் அவர்களது பாரம்பரிய இடங்களில் மீளக் குடியமர்த்து
கருத்து தெரிவிக்க