எழுக தமிழ் நிகழ்விற்கு இன்றைய தினம் திங்கட்கிழமை வடக்கில் பூரண ஹர்த்தால் அனுஸ்ரிக்க அழைப்பு விடுக்கப்பட்ட போதும் இன்றைய தினம் மன்னாரின் இயல்பு நிலை வழமை போல் காணப்பட்டது.
பௌத்த மயமாக்களை உடன் நிறுத்தில், இராணுவத்தினருடைய வசம் உள்ள பொது மக்களின் காணிகளை விடுவித்தல், சர்வதேச விசாரணை ஒன்றே தீர்வு, வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களுக்கு உடனே பதில் வேண்டும், அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் நிறுத்தி இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ் முற்றவெளி பகுதியில் இடம் பெறவுள்ள எழுக தமிழ் நிகழ்விற்கு ஆதரவு வழங்கும் வகையில் வடக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட ஏற்பாட்டுக்குழு அழைப்பு விடுத்திருந்தது.
எனினும் மன்னார் பகுதியில் ஹர்த்தால் அனுஸ்ரிக்கப்படவில்லை.மன்னார் பஸார் பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் வழமை போல் இயங்கியது.தனியார் போக்கு வரத்துச் சேவைகள் வழமை போல் இடம் பெற்று வருகின்றது.
பாடசாலைகள்,அரச,தனியார் நிறுவனங்களின் செயற்பாடுகள் வழமை போல் இடம் பெற்று வருகின்றது.ஒரு சில வர்த்தக நிலையங்கள் மாத்திரமே மூடப்பட்டுள்ளது.
இதே வேளை எழுக தமிழ் நிகழ்விற்கு ஆதரவு வழங்கும் வகையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள அரசியல் சிவில் சமூக பிரதிநிதிகள் பலர் நேரடியாக கண்டன போரட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இதே வேளை இலங்கை அரச போக்குவரத்துச் ஊழியர்களுக்கு சம்பள சுற்றறிக்கையின் படி புதிய சம்பள முறை துரிதமாக நடைமுறைப்படுத்த கட்டாயப்படுத்தி இலங்கை அரச போக்குவரத்துச் சபை ஊழியர்கள் இன்று திங்கட்கிழமை (16) தொடக்கம் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி இலங்கை அரச போக்குவரத்துச் சபையின் மன்னார் சாலை ஊழியர்களும் இன்றைய தினம் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் இன்றைய தினம் மன்னாரில் இருந்து உள்ளக மற்றும் வெளி மாவட்டங்களுக்கான அரச போக்குவரத்து சேவைகள் இடம் பெறவில்லை.
எனினும் மக்கள் எவ்வித அசௌகரியங்களும் இன்றி தனியார் போக்குவரத்துச் சேவையூடாக தமது பயணங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க