ஜனாதிபதித் தேர்தலை தாமதப்படுத்த அரசாங்கம் திட்டமிடுவதாக தேசிய மக்கள் சக்தி அமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் மக்கள் சந்திப்பு இன்று கொழும்பில் கொழும்பில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த வருடத்தின் இறுதியில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டிய தேவை உள்ளது. இந்த நிலையில் தேர்தலை தாமதப்படுத்தும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தெரிவு உட்பட அனைத்து முக்கிய நிகழ்வுகளிலும் மக்கள் விடுதலை முன்னணி தனித்துவத்துடன் இருப்பதாகவும் அவர் பெருமிதம் வெளியிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க