உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க தயார்- ஐக்கிய நாடுகள்

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் மூலம் நீதியை நிலைநாட்டவும் உண்மைகளை கண்டறியும் அர்ப்பணிப்புக்காகவும் அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்க தயார் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றின் மூலம் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தி;ன் பணிகள் பாரியவை. இதற்கு அரச அதிகாரிகளின் ஆதரவு அவசியமானது.

இதனைக்கொண்டே சவாலான விடயங்களுக்கு தீர்வுகளை எட்டமுடியும்.

இதன் மூலம் பல ஆண்டுகளாக தீர்வுக்காக காத்திருக்கும் மக்களுக்கு நிவாரணத்தை வழங்கமுடியும்.

அத்துடன் இவ்வாறான குற்றங்கள் மீண்டும் இடம்பெறாது என்பதை உறுதிசெய்யமுடியும் என்று ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான இணைப்பாளர் ஹானா சிங்கர் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 30 திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சர்வதேச வலிந்து காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டே இந்த கருத்துக்களை அவர் வெளியிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க