உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

எம்சிசிக்கும் அமரிக்க இராணுவத்துக்கும் தொடர்பு இல்லை.

ஐக்கிய அமரிக்காவின் மிலேனியம் செலேஞ் கோப்பரேசன் திட்டத்தின்கீழ் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 480 மில்லியன் டொலர்கள் பொருளாதார வளாச்சிக்காகவே வழங்கப்படவுள்ளன.

இதற்கான உடன்படிக்கை கடந்த டிசம்பரில் கைச்சாத்திடப்படவிருந்தது.

எனினும் இலங்கையின் அரசியல் குழப்பம் காரணமாக அது பிற்போடப்பட்டது.

எனினும் தற்போது தாம் இலங்கை அமைச்சரவையின் அனுமதிக்காக காத்திருப்பதாக மலேனியம் செலேஞ் கோப்பரேசனின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஜெனர் எடெல்மென் தெரிவித்துள்ளார்.

இலங்கை- அமரிக்கா வர்த்தக சம்மேளன கூட்டம் நேற்று இடம்பெற்ற வேளையில் அவர் இதனைக்குறிப்பிட்டார்.

இந்த உதவியின் மூல்ம் இலங்கையின் போக்குவரத்துத்துறை மேம்படுத்தப்படவுள்ளது.

இந்த நிதியுதவிக்கும் அமரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை.

இதனை மையமாகக்கொண்டு அமரிக்கா இலங்கையில் காணிகளை கொள்வனவு செய்யாது.

இந்தநிலையில் அமரிக்காவின் இந்த நிதியுதவியைக் கொண்டு இலங்கையர்களால் திட்டமிடப்படும் அபிவிருத்தி திட்டங்கள் இலங்கையர்களாலேயே உருவாக்கப்பட்டு அவர்களாலேயே நிர்வகிக்கப்படவுள்ளதாகவும் ஜெனர் எடெல்மென் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க