வெலிக்கடை சிறைக் கலவரம் தொடர்பாக மூன்று பேர் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசேட உயர் நீதிமன்றத்தால் அக்டோபர் 14 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்றைய விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்டவர்களாக பெயரிடப்பட்ட சிறை புலனாய்வு அதிகாரி இந்திக சம்பத் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்காமல் வழக்கை தொடர நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதேவேளை வெளிநாடுகளுக்குச் சென்றதாக நம்பப்படும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஜூலை மாதம் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார், இந்த தாக்குதலின் விளைவாக 27 கைதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க