உள்நாட்டு செய்திகள்புதியவை

ஜனநாயக தேசிய முன்னணி கொள்கைகளை தீர்மானிக்க விசேட குழு

சமூக மற்றும் ஜனநாயகக் கொள்கைகளை மையமாகக் கொண்ட உத்தேச ஜனநாயக தேசிய முன்னணியின் (டி.என்.எஃப்) கொள்கைகள் குறித்து தீர்மானிக்க 7 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ராஜித் சேனரத்ன தெரிவித்தார்.

இன்று (ஆகஸ்ட் 29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் சேனரத்ன இதனை கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டாலி சம்பிக ரனவக, கபீர் ஹாஷிம், அகிலவிராஜ் கரியவசம், மனோ கணேசன், ரிஷாத் பதியுதீன், மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸைச் சேர்ந்த நிஜாம் காரியப்பன் ஆகியோரே குறித்த குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியின் யாப்பு தொடர்பான விஷயங்கள் இந்த வாரம் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, கூட்டணியின் செயலாளர் ஐக்கிய தேசிய கட்சியினால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு நபராக இருப்பார்.

அதே நேரத்தில் கூட்டணிக்கான செயலகம் ஒரு சுயாதீனமான இடத்தில்தான் இருக்கும் எனவும் சிறிகொத்தாவில் இயங்காது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க