விளையாட்டு செய்திகள்

வசதி வாய்ப்புகளில் 10-20% கூட தடகள வீரர்களுக்குக் கிடைப்பதில்லை:சேவாக்

பல விளையாட்டுகளும் பன்முகத் திறமையும் கொண்ட ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் பொதுநலவாயப்போட்டிகள் கிரிக்கெட்டை விட மிகப்பெரியது என்று விரேந்திர சேவாக் தெரிவித்தார்.

மும்பையில் புத்தக அறிமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சேவாக் 2 தடகள வீரர்களிடம் நேர்காணல் செய்தார், அப்போது, நாட்டில் கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்கும் வசதி வாய்ப்புகள் மற்ற விளையாட்டு வீரர்களுக்குக் கிடைப்பதில்லை என்று தெரிவித்தார்.

“ஒலிம்பிக் போட்டிகள், பொதுநலவாயப் போட்டிகள் ஆகியவை கிரிக்கெட்டை விட பெரிய நிகழ்வுகள் என்று நான் எப்போதும் நினைப்பதுண்டு.

இந்த தடகள வீரர்களை இன்னும் சிறப்பாக கவனித்துக் கொள்ளப்பட வேண்டும் என்று நினைப்பேன். அதாவது இவர்களுக்கு நல்ல உணவு, ஊட்டச்சத்து, பயிற்றுநர்கள், உடற்கோப்பு மருத்துவர்கள் ஆகியவை தேவை என்று அடிக்கடி நான் நினைப்பதுண்டு என்று விரேந்திர சேவாக் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க