ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சிலருக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் இந்த கலந்துரையாடல் நடைப்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது என குறிப்பிடப்படுகிறது.
இந்த கலந்துரையாடலில் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, கட்சியின் தவிசாளர் அமைச்சர் கபீர் ஹசீம், முன்னாள் தவிசாளர் மலிக்சமர விக்ரம உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஐக்கிய தேசிய கட்சியின்ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இழுபறி தொடரும் நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
கருத்து தெரிவிக்க