உள்நாட்டு செய்திகள்புதியவை

சிஐடி பணிப்பாளருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு!

குற்றவியல் புலனாய்வுத் துறையின் (சிஐடி) பணிப்பாளர் சனி அபேசேகர நாளை (ஆகஸ்ட் 29) அரச அமைப்புகளில் இடம்பெற்ற ஊழல் குறித்து விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணையத்தின் காவல் பிரிவு முன் ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ராஜகிரியவில் உள்ள விவசாய அமைச்சின் கட்டிடத்தின் கார் நிறுத்தும் இடம் குறித்து இடம்பெற்று வரும் விசாரணை தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு சிஐடி பணிப்பாளரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

டி.பி.ஏ.ஜெயசிங்க நிறுவனத்துக்குச் சொந்தமான தற்போதைய கட்டிடத்திற்காக அமைச்சு செலுத்திய ரூ. 21.5 மில்லியனுக்கும் அதிகமான மாத வாடகை தொடர்பில் குறித்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த முறைப்பாடு தொடர்பாக நாளை சாட்சியங்களை வழங்க நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க ஆணையத்தின் முன் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டில் விவசாய அமைச்சராக இருந்த காலத்தில் குறித்த கட்டிடம் குத்தகைக்கு வாங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க