நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நேற்று (நவம்பர் 25) இரவு 9.00 மணி முதல் இன்று (நவம்பர் 26) இரவு 9.00 மணி வரை நாட்டின் சில பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க பதுளை மாவட்டத்திலுள்ள ஹல்துமுல்ல, எல்ல, பசறை, ஹாலிஎல, மீகஹகிவுல, பதுளை, லுனுகல ஆகிய பிரதேசங்களுக்கும் காலி மாவட்டத்திலுள்ள பத்தேகம, எல்பிட்டிய, நாகொட பிரதேசங்களுக்கும் களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள பிரதேசத்திற்கும் கண்டி மாவட்டத்தின் உடுதும்பர, உடபலாத, தெல்தோட்டை, ககவடகோரளய பிரதேசங்களுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்தோடு கேகாலை மாவட்டத்திலுள்ள புலத்கொஹுபிட்டிய, கேகாலை, யட்டியந்தோட்டை பிரதேசங்களுக்கும் மாத்தளை மாவட்டத்தின் அம்பங்கக கோரலய, ரத்தோட்டை, உக்குவெல, வில்கமுவ, லக்கல பல்லேகம,நாவுல, மாத்தளை ஆகிய பிரதேசங்களுக்கும் மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தர பிரதேசத்திற்கும் நுவரெலியா மாவட்டத்திலுள்ள அம்பகமுவ, ஹகுரன்கெத்த, வலப்பனை பிரதேசங்களுக்கும் இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள இம்புல்பே, ஓபநாயக்க, பலாங்கொட, இரத்தினபுரி, பெல்மடுல்ல, கஹவத்த பிரதேசங்களுக்கும் குறித்த மண்சரிவு அபாய எச்சரிக்கை அமுலில் இருக்குமென தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க