தொல்பொருள் திணைக்களத்தால் தொல்லை கொடுக்கின்றதும் வடகிழக்கில் ஆயிரம் விகாரைகளை அமைக்க நிதி ஒதுக்கப் போவதாகவும் கூறுகின்ற அமைச்சர் சஜித் பிரேமதாசாவா தமிழ் மக்களுக்கு தீர்வைக் கொடுக்கப் போகின்றார் என ஈழ மக்கள் ஐனநாயககக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா கேள்வியெழுப்பியுள்ளார்.
யாழ் ஸ்ரான்லி வீதியிலுள்ள அவரது கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது..
நாட்டில் ஐனாதிபதித் தேர்தலொன்று நடைபெறப் போவதாகக் கூறப்படும் நிலையில் பல கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.
அதே நேரம் அந்த வேட்பாளர்களுக்கு ஆதரவை வழங்கும் தரப்புக்களும் தங்கள் ஆதரவு யாருக்கு என்பiதுயும் வெளிப்படுத்தி வருகின்றன.
இதில் யானைக் கட்சிக்குள் யானைக்கும் பூனைக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவர் தான் தான் வேட்பாளர் என்று கூறி வருகின்றார்.
ஆனால் மற்றவர்களோ இவர் வேட்பாளர் இல்லை என்றும் தமது வேட்பாளர் யார் என்று இன்னும் அறிவிக்கவில்லை என்று கூறுகின்றனர்.
ஆக மொத்தத்தில் அங்கு யானை புனை என்று பிரச்சனை தான் இருக்கின்றது.
இவ்வாறான நிலைமையில் தானே வேட்பாளர் என்று கூறி வருபவருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பேசியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன.
ஆயினும் இணக்கப்பாடுகள் எவையும் எட்டப்படவில்லை என்பதால் அடுத்த பேச்சு நடாத்தப் போவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் தானே வேட்பாளர் என்று அறிவித்து வருகின்ற அமைச்சர் சஐpத் பிரேமதாசா ஐனாதிபதியாக வந்தால் தமிழ் மக்களின் பிரச்சனைகளை ஆறு மாதத்தில் தீர்க்கப் போவதாகவும் கூறியிரப்பதாக செய்திகள் வந்துள்ளன.
ஆனால் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் போது தமிழ் மக்களின் பிரச்சனைகளை உடனேயே தீர்க்கப்படுமென்று கூறி ஆட்சி அமைத்து நான்கு வருடங்களாகியும் தீர்க்கவில்லை.
இவ்வாறு நான்கு வருடங்களில் பிரச்சனையைத் தீர்க்காமல் இருந்தவர்களா இனி ஆறு மாதத்திற்குள் தீர்க்கப் போகின்றனர்.
அவ்வாறு அவர் கூறுகின்ற ஆறு மாதம் என்பது இன்னும் எத்தனை வருடங்கள் எடுக்கப் போகிறதென்று தெரியவில்லை.
மேலும் தமிழ் மக்களுக்கு இன்றைக்கு பெரிய பிரச்சனையாக இருப்பது தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகள் தான்.
அந்தத் தினைக்களத்தின் செயற்பாடகள் தொடர்பிலும் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கின்ற நடவடிக்கைகள் குறித்தும் நான் பாராளுமன்றத்தில் கேள்வி கேட்டாலும் அதற்குரிய பதிலை அந்த அமைச்சராக இருக்கின்ற சஜித் பிரேமதாசா வழங்குவதில்லை.
அமைச்சராக இருக்கின்ற போதே தனது அமைச்சினால் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடகள் தொடர்பில் அக்கறையில்லாமல் இருக்கின்றவர் ஐனாதிபதியானால் என்ன நடக்குமென்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.
ஆக மொதத்தத்தில் தொல்பொருள் அமைச்சு என்பது தொல்லை கொடக்கிற அமைச்சாகத் தான் இருக்கிறது.
ஆகவே இந்த அமைச்சர் ஐனாதிபதியாக வந்தால் எவ்வாறு எங்களது பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பார். ஏன்றார்.
[நிருபர் தம்பிராஜா பிரதீபன்]
கருத்து தெரிவிக்க