நல்லூர்க் கந்தனுக்கு அடியவர்கள் எடுக்கின்ற தூக்குக் காவடிகள்; ஆலயத்திற்குள் அனுமதிக்கப்படாதமை மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியிருப்பதாக ஈழ மக்கள் ஐனநயாகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமா டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழிலுள்ள அவரது கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடாத்திய ஊடகவியியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது..
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தன் ஆலய வருடாந்த திருவிழா நடைபெற்று வருகின்றது.
இத் திருவிழாவின் போது அடியவர் ஒருவர் தூக்குக் காவடி எடுத்திருக்கின்றார்.
ஆனால் அந்த அடியவர் ஆலயத்திற்குள் காவடியுடன் அனுமதிக்கவில்லை.
ஆலய முன்றலிற்கும் அனுமதிக்கப்படாமல் ஆலயத்திற்கு முன்பக்கமாகவுள்ள சோதனை சாவடியுடன் நிறுத்தப்பட்டுள்ளார்.
ஆனால் ஆலயத்திற்கு தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்ற வருகின்ற அடியவர்களின் காவடிகள் கடந்த நெருக்கடியான காலத்திலும் போது நாம் ஆலய மன்றல் வரை செல்வதற்கு அனுமதித்திருந்தோம்.
ஆனால் தற்போது அதற்கு அனுமதியளிக்காதமை மிக வருத்தமாக இருக்கிறது. ஆயினுமு; நாங்கள் ஆட்சியில் இருந்திருந்தால் இதற்கு இடம் கொடுத்திருக்க மாட்டோம் என்றார்.
இதே வேளை நல்லூர்க் கந்தனின் தேர் மற்றும் தீர்த்தத்திருவிழா நாளை மறுதினம் வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் நடைபெறவிருக்கின்றது.
இந்த இரண்டு திருவிழா நாட்களின் போதே அதிகளவிலானோர் தூக்குக் காவடிகளை எடுப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
[ நிருபர் தம்பிராஜா பிரதீபன் ]
கருத்து தெரிவிக்க