உள்நாட்டு செய்திகள்புதியவை

2000 தொழிலாளர்களை இணைக்க திறைசேரியின் அனுமதியை கோரும் அர்ஜுன!

போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரனதுங்க சுமார் 2,000 தொழிலாளர்களை தொடருந்து துறைக்கு சேர்ப்பதற்கு திறைசேரியின்அனுமதியை கோரியுள்ளார் என்று தொடருந்து சேவை பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

சேதமடைந்த தொடர்ந்து பாதை பழுதுபார்ப்புகளை விரைவுபடுத்துவதற்காக இந்த தொழிலாளர்களை நியமிக்க தொடருந்து சேவைகள் திணைக்களம் முன்பு திறைசேரி அனுமதியை கோரியது என்று அவர் விளக்கினார்.

எவ்வாறாயினும், திறைசேரி சாதகமாக பதிலளிக்கவில்லை, இந்நிலையில் இந்த விவகாரத்தை போக்குவரத்து அமைச்சர் தற்போது முன்னெடுத்துள்ளார் என பெர்னாண்டோ தெரிவித்தார்.

தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக ஏற்படும் சேதங்களை சீர் செய்யும் போது தாமதங்கள் ஏற்படுகின்றன, மேலும் இது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி, இந்த தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அமைச்சரவை திட்டத்தை அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவும் எதிர்காலத்தில் முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க