தமிழ் மக்களின் கோரிக்கைகளோடு ஜனாதிபதி வேட்பாளார் கோட்டாபய ராஜபக்ச அவர்களை சந்தித்து பேசிய விடயங்கள் குறித்து தமக்கு நம்பிக்கை அளித்திருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளார் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு ஆட்சி இங்கு வந்தாலும் அவர்களுடன் பேரம் பேசி தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்த்து வைப்பதே எமது விருப்பமாகும்.
அந்த வகையில் அதிகாரத்தில் உட்காரப்போகின்ற கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து எது வித அரசியல் பலமும் இன்றி, அந்த அரசியல் பலத்தை எமது மக்கள் இனிவரும் காலத்தில் எமக்கு வழங்குவார்கள் என்ற நம்பிக்கையோடு உரையாடியிருந்தோம்.
இதன் பொது இலங்கைத்தீவின் சகல இன மக்களும் ஏற்றுகொண்ட 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் இருந்து தொடங்கி, அதை மேலும் பலப்படுத்தி அரசியல் தீர்வு நோக்கி செல்வது,
எமது தேசத்தை தூக்கி நிறுத்தும் அபிவிருத்தி பணிகளை நாம் விட்ட குறையில் இருந்து மறுபடி தொடங்குவது,
முதற்கட்டமாக வேலையற்ற தமிழ் இளைஞர் யுவதிகளில் ஒரு இலட்சம் பேர்களுக்கு வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுப்பது,
யுத்தம் காரணமாக கல்வித் தகமையை இழந்து நிற்கும் தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு தற்காலிக வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுப்பதோடு கால அவகாசத்தின் அடிப்படையில் அதற்கான கல்வித்தகமையை அவர்கள் பெற்றிடவும், வேலையை நிரந்தரமாக்கவும் ஏற்பாடு செய்வது,
காணாமல் போன உறவுகளைத் தேடும் மக்களின் கண்ணீருக்கு பரிகாரம் பெற்றுக் கொடுப்பது…அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான முயற்சியில் வெற்றி காண்பது தொடர்பில் பேசப்பட்டது.
நாம் மனம் திறந்து பேசியதில் எமக்கு நம்பிக்கை தரும் சமிஞ்ஞைகள் கிடைத்திருக்கின்றன என தெரிவித்துள்ளார்
கருத்து தெரிவிக்க