” தலைவரின் கட்டளையையும், கட்சி யாப்பையும்மீறும் வகையில் செயற்படும் உறுப்பினர்கள் கட்சியைவிட்டு வெளியேறுவதே சிறப்பாக இருக்கும்.” – என்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
கிரிபத்கொடை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றிருந்த சரத் பொன்சேகாவிடம், சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்றுவரும் மக்கள் பேரணி தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
” சஜித் பிரேமதாச கட்சியின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கவில்லை. எனவே, எந்த அடிப்படையில் ஆதரவு வழங்குவது? கட்சி தலைவரின் கட்டளையையும், யாப்பையும்மீறும் வகையில் செயற்படும் உறுப்பினர்களுக்கு எதிராக தராதரம் பராது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
கட்சியாககூடி பேசி தீர்மானம் எடுக்காமல் குழுக்களாக பிரிந்து கிளர்ச்சி செய்பவர்கள் பதவிகளை துறக்கவேண்டும். அதைவிடவும் கட்சியைவிட்டு வெளியேறுவதே சிறப்பாக இருக்கும்.” என்றும் அவர் கூறினார்.
கருத்து தெரிவிக்க