உத்தர பிரதேசத்தில் முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்த கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
। வரதட்சனை தராவிட்டால் முத்தலாக் கூறி விவகாரத்து செய்துவிடுவேன் என்று சமீம் அகமது என்று நபர் தனது மனைவியான நாசியா பர்வீனை அச்சுறுத்தியுள்ளார்.
இது குறித்து, முத்தலாக் தடைச்சட்ட பிரேரணையின் கீழ் நாசியா பர்வீன் வழக்கு பதிவு செய்ய முயற்சி செய்துள்ளார். அந்த புகாரை காவல் அதிகாரி ஆரம்பத்தில் ஏற்க மறுத்ததாக குற்றம் சாட்டிய நாசியா பர்வீன், காவல் ஆணையத்தை அணுகியுள்ளார்.
இதையடுத்து, உத்தர பிரதேச மாநில பெண்கள் ஆணையத்தின் உத்தரவின் பேரில், சமீம் அகமது மீது முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் அதிகாரி அனில் கபர்வன் தெரிவித்தார்.
மேலும், தன்னை விவாகரத்து செய்ய தூண்டியதாக சமீம் அகமதுவின் சகோதரி மீதும் நாசியா பர்வீன் புகார் கூறியதை அடுத்து, அவருடைய சகோதரி மீது வேறொரு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க