உள்நாட்டு செய்திகள்புதியவை

மைத்திரி, மஹிந்தவுக்கிடையில் முக்கிய சந்திப்பு

ஜனா­தி­பதி மைத்­தி­ரிபால சிறி­சே­னவுக்கும் சிறி­லங்கா பொது­ஜன பெர­மு­னவின் தலைவர் மஹிந்த ராஜ­பக்ஷ­வுக்கும் இடையில் அடுத்த வார­ம­ளவில் முக்­கிய சந்­திப்பு இடம்­பெ­ற­வுள்ள­தாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவும் இணைந்து கூட்­டணி அமைப்­பது தொடர்­பாக நாளை செவ்­வாய்க்­கி­ழமை மீண்டும் பேச்­சு­வார்த்­தை­களை ஆரம்­பிக்­க­வுள்­ளன.

அந்தப் பேச்­சு­வார்த்­தை­களின் பின்­னரே குறித்த தலைவர்களின் முக்கிய சந்­திப்பு இடம்­பெறும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இதன்­போது எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்தல் மற்றும் அடுத்த கட்­ட­ நகர்வுகள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வுள்­ளது.

இதேவேளை இரண்டு வாரங்­க­ளுக்கு முன்னர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­ச­னே­வுக்கும் முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்­ச­வுக்கும் இடையில் தீர்க்­க­மான ஒரு சந்­திப்பு நடை­பெற்­றி­ருந்­தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க