உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம்: இன்று 2 ஆம் கட்ட விசாரணை

நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் தொடர்பில் பௌத்த துறவிகள் முன் வைத்த மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் ஆலய வளாகத்தை சுவீகரித்து பௌத்த விகாரை அமைத்துள்ளமை தொடர்பில் முல்லைத்தீவு காவல்துறையினரால் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்நிலையில் இடையூறு இல்லாமல் வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு அதை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த தீர்ப்புக்கு எதிராக பௌத்த துறவி மற்றும் பௌத்த துறவி சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணிகள் உள்ளிட்டோரால் வவுனியா மேல் நீதிமன்றில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் ।குறித்த வழக்கின் விசாரணை ஒத்திவைப்பின் பின்னர் இன்று விசாரணைக்கு வந்துள்ளது.

இந்த வழக்கில் செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் சார்பில் சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் ,ஆலய நிர்வாக சபையினர் கலந்துகொண்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க